உலகக் கோப்பை ஹாக்கி : முதல் ஆட்டத்தில் வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.!
ஒடிசாவில் இன்று தொடங்கிய எஃப்ஐஎச் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2023 ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்கியது. புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்று வரும் 2023 உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டம் அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையே நடைபெற்றது. இதில் உலகின் ஏழாவது தரவரிசையில் உள்ள அர்ஜென்டினா, உலகின் 14வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதல் காலிறுதியில் தென்னாப்பிரிக்கா அர்ஜென்டினாவிற்கு எதிராக ஈடுகொடுத்து கடுமையாக விளையாடியது. இரண்டாவது காலிறுதியில் அர்ஜென்டினா மூன்று பெனால்டி கார்னர்களை அடுத்தடுத்து பெற்றது, ஆனால் தென்னாப்பிரிக்கா அணி அர்ஜென்டினாவின் கோல்களை தடுத்தது. அர்ஜென்டினா அணியின் வீரர் மைகோ கசெல்லா போட்டியின் 42 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
அர்ஜென்டினா அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி உலகின் முதல் தரவரிசையில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதே நாளில் தென்னாப்பிரிக்கா தனது அடுத்த போட்டியில் பிரான்சை எதிர்கொள்கிறது.