Hockey World Cup 2023 : ஜப்பானை வீழ்த்தியது கொரிய அணி..!
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கி 5 வது நாள் முடிந்த நிலையில் இரண்டு போட்டிகள் நேற்று புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் 15 வது போட்டி கொரிய மற்றும் ஜப்பானுக்கும் இடையே நடைபெற்றது. 16 வது போட்டி ஜெர்மனி மற்றும் பெல்ஜியமூக்கு இடையே நடைபெற்றது.
மூன்றாவது இடத்துக்காக நடந்த போட்டியில் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. கொரிய அணி மூன்று பெனால்டி கார்னர்களைச் சேமித்து போட்டியை வென்று இப்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தனது அடுத்த போட்டியில் கொரிய அணி ஜெர்மனியுடன் மோத உள்ளது.
ஜெர்மனி மற்றும் பெல்ஜியமூக்கு இடையே நடைபெற்ற போட்டியின் முதல் காலிறுதியில் பெல்ஜியம் அணி சார்லியர் அடித்த கோல் மூலம் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது காலிறுதியில் ஜெர்மனியும் பெல்ஜியமும் சமமாக இருந்தது. பின்னர் கடைசி காலிறுதியில் டாம் கிராம்புஷின் அடித்த பெனால்டி ஸ்ட்ரோக் கோல் மூலம் ஜெர்மனி முன்னிலை பெற்றது. ஜெர்மனி அணி வெற்றி பெரும் நிலையில் இருந்த பொது பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.