பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய அணி த்ரில் வெற்றி..! அரை இறுதி சுற்றை தக்க வைத்து அபாரம் ..!
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் கால் இறுதி சுற்றானது நடைபெற்றது.
இதில் இந்திய அணியும், கிரேட் பிரிட்டன் அணியும் மோதியது. 15 நிமிடங்கள் கொண்டு 4 பாதிகளாக நடைபெறும் ஹாக்கி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது.
இதனால் 2-ஆம் பாதியில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து கிரேட் பிரிட்டனும் சற்று இடைவேளை விட்டு முதலாவது கோலை அடித்தனர்.
இதனால் 1-1 என போட்டி சமநிலையில் சென்றது, தொடர்ந்து நடந்த 3-வது மற்றும் 4-வது பாதியிலும் இரண்டு அணிகளும் மேற்கொண்டு எந்த ஒரு கோலும் அடிக்காமல் போட்டியின் இறுதி நேரம் முடியும் வரை 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதனால் அடுத்த கட்டமாக இந்த போட்டி சூட்-அவுட்டை நோக்கி நகர்ந்தது. விறுவிறுப்பின் உச்சத்தில் சென்ற இந்த போட்டியில் ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டன் 2 கோல்களை தவறவிடுவார்கள்.
ஆனால் இந்திய அணி அபாரமாக அனைத்து கோலையும் அடித்து ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது. இதனால், இந்தியா அணி அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.