இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமனம்..!

Default Image

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டனை, ஹாக்கி இந்தியா நியமித்துள்ளது.

புதிய தலைமை பயிற்சியாளர்:

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரேக் ஃபுல்டனை ஹாக்கி இந்தியா நியமித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்ததையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரஹாம் ரீட் விலகினார். இவரது ராஜினாமாவை ஹாக்கி இந்தியா ஏற்றுக்கொண்ட நிலையில், ஏறக்குறைய 25 வருட பயிற்சி அனுபவமுள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரேக் ஃபுல்டன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரேக் ஃபுல்டன்:

தென்னாப்பிரிக்காவின் சர்வதேச விளையாட்டு வீரரான கிரேக் ஃபுல்டன், 1996 முதல் 2005 வரை 10 ஆண்டுகளில் 195 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996 அட்லாண்டா மற்றும் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியதோடு உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளிலும் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெல்ஜியம் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் மெக்லியோடிற்கு உதவியாளராக சேர்ந்தார். அவர் உதவியராக சேர்ந்த ஆண்டின் இறுதியில் புவனேஸ்வரில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.

பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்:

இதையடுத்து “இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டனை ஹாக்கி இந்தியா இறுதி செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எதிராக விளையாடிய பெருமை எனக்குக் கிடைத்துள்ளது, இப்போது அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்