சர்வேதேச டி 20 போட்டியில் புதிய சாதனை படைத்த முதல் இந்திய வீரர்..!
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.கடந்த 03-ம் தேதி நடைபெற்ற முதல் டி -20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டி -20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் 100-வது சர்வேதேச டி 20 போட்டியாகும்.
இந்திய அணி சார்பில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்று உள்ளார்.இந்திய அணியில் முன்னாள் கேப்டன் டோனி 98 போட்டிகளிலும் , விராட் கோலி 93 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.