டான் பிராட்மென் சாதனையை சமன் செய்த ஹிட் மேன் ..!
இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. அப்போது மழை தொடர்ந்து பெய்ததால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா பெண்கள் அடித்துள்ளார். இந்நிலையில் ரோகித் சொந்த மண்ணில் 15 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடி 884 ரன்களை அடித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளின் சராசரி 98.22 ஆக உள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேன் சராசரியை சமன் செய்து உள்ளார். டான் பிராட்மேன் சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளின் சராசரி 98.22 ஆக உள்ளது.அவர் ஐம்பது இன்னிங்ஸில் விளையாடி 4322 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.