இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாம் நாள் போட்டி நடைபெற்றது. நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக எல்கர் 160 ரன்கள் அடித்தார். இப்போட்டியில் எல்கர் விக்கெட்டை வீரர் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது விக்கெட்டை 200 விக்கெட்டை பதிவு செய்தார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் அதிவேகத்தில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்தர் ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை வீரர் ஹெரத் 47 டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்தி சாதனையாக இருந்தது தற்போது அந்த சாதனையை ரவீந்தர் ஜடேஜா 44 போட்டிகளில் வீழ்த்தி முறியடித்துள்ளார்.
மேலும் இந்தியா சார்பில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதை தொடர்ந்து இந்திய அணி சார்பில் டெஸ்ட் போட்டியில் 200-க்கு மேல் விக்கெட் எடுத்த பத்தாவது வீரர் என்ற பெருமையை ரவிந்திர ஜடேஜா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…