ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

நடைபெற்ற 5-வது மற்றும் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான பென் டக்கெட் 107 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.

AUS won the ODI Series

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 2-2 என சமநிலையில் இருந்து வந்தது.

இதனால், 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடனே இந்த போட்டியானது தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் , ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை எளிதாகவே சமாளித்து பவுண்டரிகள் அடித்து ரன்களை சேர்த்தனர். ராக்கெட் வேகத்தில் ரன்கள் எகிறிக்கொண்டிருக்கையில் துரதிஷ்டவசமாக தொடக்க வீரரான சால்ட் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் 4 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்ததால் இங்கிலாந்து அணி மெதுவாகவே ரன்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், களத்தில் இருந்த ஹாரி புரூக்கும், பென் டக்கெட்டும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள். அவர்களது அதிரடியில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உச்சம் பெற்றது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹாரி புரூக் 72 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலைத்து விளையாடாமல் தடுமாறியே ரன்களை சேர்த்தனர். மேலும், சொற்பன்களுக்கு ஆட்டமும் இழந்தனர் மறுமுனையில் இருந்த பென் டக்கெட் மட்டும் தேவையான நேரத்தில் பௌண்டரிகளை தட்டி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.

சரியான நேரத்தில் சதம் அடித்த அவர், துரதிஷ்டவசமாக தொடர்ந்து விளையாட முடியாமல் 107 ரன்களுக்கு டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில், டெயில் எண்டர்களாக களமிறங்கிய பேட்ஸ்மெண்ட்கள் யாரும் சரிவர விளையாடவில்லை, அடில் ரஷீத் மட்டும் 36 ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு சற்று வலு கூட்டினார்.

இதனால், இறுதியில் 49.2 ஓவர்களில் 10 விக்கெட் இழந்த இங்கிலாந்த அணி 309 ரன்கள் எடுத்து 310 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் 28/4 என சர்வதேச அளவில் புதிய ஸ்பெல்லை ஹெட் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணி நிர்ணயித்த 310 ரன்களை எடுக்க பேட்டிங் களமிறங்கியது. இங்கிலாந்து அணியைப் போலவே ஆஸ்திரேலிய அணியும் தொடக்கத்தை சிறப்பாகவே தொடங்கினார்கள்.

ஆனால், அதிரடி காட்டக்கூடிய ஹெட் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் களத்தில் இருந்த மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். ஆனால், அவரும் எதிர்பாராத விதமாக மேத்யூ போட்ஸின் பந்தில் ஜேமி ஸ்மித்திடன் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதன் பிறகு களத்தில் ஸ்டீவ் ஸ்மித்தும், ஜாஸ் இங்கிலீஷும் நிதானமாக தட்டி தட்டி ரன்களை சேர்த்தனர். சரியாக 20.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 165 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் விறுவிறுப்பாக சென்ற போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது நிறுத்தப்பட்டது.

ஆனால், அப்போது இதே ஓவரில் இதே ஸ்கோரை இங்கிலாந்து அணி பேட்டிங்கோடு ஒப்பிடுகையில் 49 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. மேலும், நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் DLS முறைப்படி ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் (DLS முறைப்படி) வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர். ‘விறுவிறுப்பாக சென்ற போட்டி இறுதி வரை நடைபெற்றிருந்தது இங்கிலாந்து அணி தோற்றால் கூட பரவாயில்லை.

ஆனால், இப்படி மழை குறிக்கிட்டு ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக முடிவு வந்தது இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இதனால், 5 போட்டிகள் அடங்கிய இந்த ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்