யாரும் சொல்லாததை அவர் சொன்னார் .! ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்த சச்சின்.!
- சச்சினிடம் நீங்கள் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நல்ல இருக்கும் எனக்கூறினார்.
- யாரும் சொல்லாததை அவர் சொன்னார்.எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன என சச்சின் கூறினார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின்போது தனக்கு நடந்த அனுபவத்தை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறி நெட்டிசன்களிடம் உதவி கேட்டுள்ளார்.
அதில் “நான் சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது நான் தங்கி இருந்த ஹோட்டலில் காபி ஆர்டர் செய்தேன் . அப்போது காபியை கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் , சார் நான் உங்களிடம் ஓன்று கேட்கலாமா என கேட்டார். அதற்கு நான் சொல்லுங்கள் என கூறினேன்.
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
அந்த ஊழியர் நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைலை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நல்ல இருக்கும்” என கூறினார்.
யாரும் சொல்லாததை அவர் சொன்னார். அதன்பிறகு எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. தாஜ் கோரமண்டல் ஊழியர் என்னுடைய எல்போ கார்டை பற்றி கூறிய பிறகு அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகவும், தமிழில் டுவிட் செய்தும் சச்சின் நெட்டிசன்களுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.