இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறிவிட்டது இப்போது உள்ள இளைஞர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடுவது போல பார்த்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும் சிலர் இருந்து வருகின்றனர்.
அதில் சச்சினுக்கு சுதிர் கவுதம் , தோனிக்கு சரவணன் ஹாரி போல தற்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முகுந்தன் என்பவர் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த முகுந்தன் ஹர்திக் பாண்டியா பெயரை 16 மொழிகளில் தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். ஹர்திக் பண்டியா மோசமாக விளையாடும் நேரத்திலும் அவருக்கு ஆதரவாக முகுந்தன் இருந்துள்ளார். மேலும் ஹர்திக் பண்டியாவை போல தனது முடியை வெட்டிக் கொள்வது போன்ற செயல்களை முகுந்தன் செய்து வந்துள்ளார்.
அதிலும் ஹர்திக் பாண்டியா இந்தியாவில் எங்கு விளையாடினாலும் அவரின் ஆட்டத்தை பார்க்க சென்றுவிடுவார் முகுந்தன். இந்நிலையில் தர்மசாலாவில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையே முதல் டி20 போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டியை காண முகுந்தன் சென்று உள்ளார்.
ஆனால் மழை காரணமாக போட்டி ரத்தானது.அப்போது முகுந்தன் ஜபல்பூரில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து முகுந்தனை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முகுந்தனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த செய்தி ஹர்திக் பாண்டியாவிற்கு சென்று உள்ளது. இதை அறிந்த ஹர்திக் பாண்டியா முகுந்தனின் அறுவை சிகிச்சையின் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு அறுவை பின் செப்டம்பர் 21-ம் தேதி முகுந்தன் வீடு திரும்பினார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…