புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

Fans burn MI jersey

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இருந்து ட்ரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதன் வெளிப்பாடாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான followers குறைந்துள்ளனர். இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக followers கொண்ட ஐபிஎல் அணியாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இணையத்தில் வைரலாகும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் பதிவு!

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை அடுத்து, உச்சகட்ட விரக்தியில் ரிக்கும் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சி மற்றும் தொப்பிகளை எரித்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியனை நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வந்ததை அடுத்து, அணியின் தொப்பிகள் மற்றும் ஜெர்சிகளை எரித்து ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.

சில ரசிகர்கள் மும்பை அணியில் புதிய மாற்றத்தை ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதால் இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டனை மாற்றும் மும்பை இந்தியன்ஸ் முடிவில் ரோஹித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்பதே இதற்கு காரணமாகும்.

 

View this post on Instagram

 

A post shared by SportsGully (@sportsgully)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்