மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Hardik Pandya

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது.

அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, குஜராத் அணியை இரண்டு ஆண்டுகளில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ரன்னர் பட்டம் வென்று கேப்டனாக செய்யப்பட்டு பாண்டியா வென்று கொடுத்திருந்த நிலையில், மீண்டும் மும்பைக்கு சென்றது விமர்சனத்துக்குள்ளானது.

இது நல்ல முடிவு… தோனியின் 7ம் நம்பருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து ராஜீவ் சுக்லா கருத்து!

ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம், ரோகித் ஷர்மாவுக்கு பதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் சரியான நபர் என நினைத்து மீண்டும் அவரை ட்ரேடிங் மூலம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Captain), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது ரோகித் சர்மாவின் டி20 காலம் முடிவுக்கு வரப்போகிறது என்றே கூறலாம். இதனால் தான் ரோகித் இருக்கும்போதே கேப்டன் பொறுப்பு பாண்டியாவுக்கு வழங்கி, மேலும் மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்