புஜாராவை விட சிறந்த வீரர் இருக்காங்களா? கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

harbhajan singh about pujara

செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார்.

அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்திய முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது சற்று வேதனையாக இருக்கிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் அஜிங்க்யா ரஹானேவை தேர்வு செய்யவில்லை, சேதேஷ்வர் புஜாராவை எந்த காரணமும் சொல்லாமலே வெளியேற்றியுள்ளீர்கள்.

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் புஜாரா சாதனையைப் பார்த்தால் விராட் கோலிக்கு இருந்த அதே பங்களிப்பை புஜாராவுக்கு உண்டு. புஜாரா ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது எனக்கு இன்னும் வரை புரியவில்லை.டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் எங்களிடம் இல்லை. டெஸ்ட் போட்டிகள் என்றாலே நிதானமாக விளையாட கூடிய நல்ல வீரர் அவர்.

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

பல போட்டிகளில் இந்திய அணியை தடுமாற விடாமல் நிதானமாக விளையாடி இருக்கிறார். அவரால் தான் இந்தியா அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது. அந்த மாதிரி ஒரு வீரர் இந்த முறை அணியில் இல்லாதது வேதனை அளிக்கிறது” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், புஜாரா தென்னாப்பிரிக்காவில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 28.15 சராசரியில் 535 ரன்கள் எடுத்துள்ளார். அதைப்போல, மறுபுறம், ரஹானே 6 டெஸ்டில் 36.54 சராசரியுடன் 402 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்