ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் …! ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே..!

Kylian Mbappe

ரியல் மாட்ரிட் : பிரான்ஸ் கால்பந்து அணியின் பிரபல இளம் கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரபல கால்பந்து கிளப்பான பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பாரிஸ் கால்பந்து தொடரின் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து தான் வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து எம்பாப்பே பிரபலமடைந்த கிளப்பான ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்கு இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்தது. மேலும். ரியல் மாட்ரிட் அணிக்கு விளையாடுவது எம்பாப்பேயின் சிறு வயது கனவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார் என நேற்று ரியல் மாட்ரிட் கிளப் அவர்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அவரது ரசிகர்ளும், ரியல் மாட்ரிட் கிளப் ரசிகர்களும் மிகுந்த சந்தோசத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும், கிளப் தலைவர் ப்ளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார். ரியல் மாட்ரிட் அணியில் பிரபல வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10-வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எப்பாப்பேவுக்கு 9ம் நம்பர் கொண்ட ஜெர்சியானது வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜெர்ஸியை வாங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரியல் மாட்ரிட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்