பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் நியமனம்!
பார்சிலோனா : ஸ்பானிஷ் கிளப்பான எஃப்சி பார்சிலோனா (FC Barcelona) அணிக்கு புதிய பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் உறுதி செய்யப்பட்டுள்ளார்,
கால்பந்து உலகில் மிகப்பிரபலமான கிளப்பான எஃப்சி பார்சிலோனா கடந்த 2023- 2024 ஆண்டிற்கான லாலிகா சீசனை வெல்லாமல் தொடரை நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து, பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளரான ஜாவியை மாற்றிவிட்டு தற்போது ஹன்சி ஃபிளிக்கை பயிற்சியாளராக நியமித்துள்ளனர்.
ஜாவி, கடந்த 2022-2023 ஆண்டு நடைபெற்ற லாலிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக பயிற்சியாளராக செயலாற்றி அந்த தொடரின் கோப்பையை தட்டி சென்றிருப்பார். ஆனால், அதை தொடர்ந்து நடந்த 2023-2024 ம் வருடத்தின் லாலிகா (LaLiga) தொடரில் பார்சிலோனா அணி 2-வது இடம் பிடித்து 11 புள்ளிகள் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டிருக்கும்.
இந்த தோல்விக்கு பிறகு ஜாவி தலைமை பயிச்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதே போல புதிதாய் நியமனம் ஆன ஹன்சி ஃபிளிக் பிரபல ஜெர்மனி அணிக்காக 2021 முதல் 2023 வரையில் பயிற்சியாளராக செயல்பட்டவர் ஆவார். 2022 உலகக்கோப்பையில், ஜெர்மனியின் தோல்விக்கு பிறகு அந்த பதிவியிலிருந்து விலகினார்.
கடந்த சில ஆண்டுகளாக பல காரணங்களால் பார்சிலோனா கிளப்பில் சிறிது குழப்பம் நிலவுகிறது. அவர் அந்தச் சவால்களைச் சமாளித்து பரிசேலோனாவை வெற்றியை காண வைப்பது ஒரு போதும் எளிதான காரியம் இல்லை. இதனால் இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு பல சவால்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.