கின்னஸ் சாதனை படைத்த பிர்சா முண்டா மைதானம்; முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைப்பு.!

Default Image

ஒடிஷா, ரூர்கேலாவில் பிர்சா முண்டா தடகள மைதானத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார்.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ரூர்கேலாவில் பிர்சா முண்டா தடகள மைதான வளாகம் மற்றும் ஹாக்கி பயிற்சி மையங்களை திறந்து வைத்தார். ஸ்டேடியத்தில், 400மீ செயற்கை தடகளத்துடன் கூடிய தடகள அரங்கம் மற்றும் இயற்கையான புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஹாக்கி மைதானம் 20,011 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது, உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானமான இது 15 மாதங்களிலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது, மற்றும் இதற்கு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது. இதனை கவுரவிக்கும் விதமாக கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்