பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸும் தங்கள் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
“எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்.எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது.எனினும்,எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம்.எங்கள் பையன்,எங்கள் தேவதை.நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவுக்கும்,ஜார்ஜினா ரோட்ரிகஸும் கிறிஸ்டியானோ ஜூனியர்,மேடியோ என்ற இரு ஆண் குழந்தைகளும் மற்றும் ஈவா மற்றும் அலனா என்ற இரு பெண் குழந்தைகளும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.மேலும்,அவர் மனைவி மீண்டும் கற்பமானதையடுத்து,இரட்டை குழந்தை பிறக்கப்போவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில்,பெண் குழந்தை மட்டுமே உயிருடன் பிறந்தது என்றும் ஆண் குழந்தை உயிரிழந்து அந்த இழப்பை சமாளிக்கும் வலிமையை மட்டுமே அளித்துள்ளது என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…