நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Dgukesh

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான டி குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இந்த தொடரில் உலகின் புகழ்பெற்ற செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை ஒரு போட்டியில் வீழ்த்தினார் என்பது எல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும்.

இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான கேரி கேஸ்பரோவ் தனது 22-வது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. தற்போது இந்த சாதனையை 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகேஷ் தனது 17-வது வயதில் முறியடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் பிடே கேண்டிடேட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவரை அமோகமாக வரவேற்க அவருடன் வேலம்மாள் வித்யாலயாவில் படித்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர், அவரது உறவினர்கள், பயிற்சியாளர், நண்பர்கள் என அனைவரும் அவரை அமோகமாக வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவரது தாய் குகேஷை கட்டி அனைத்து முத்தங்கள் கொடுத்து கண்கலங்கி அவரது அன்பை பகிர்ந்தார். இந்த வீடியோ லாட்ச்சை பார்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. அங்கு அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில்,”நான் சொந்த மண்ணுக்கு வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சாதனை ஒரு சிறப்பான சாதனை. இந்த பிடே தொடர் ஆரம்பிக்கும் பொழுதே நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இந்த தொடரில் அதிர்ஷ்டம் எனக்கு சாதகமாக இருந்தது.

மேலும், தற்போது பலரும் செஸ் போட்டியினை கொண்டாடுவதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசு, எனது அப்பா, அம்மா, பயிற்சியாளர், நண்பர்கள், எனது பள்ளி என எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

அதே நேரம் இந்தியாவின் புகழ் பெற்ற க்ராண்ட்மாஸ்டரான விஸ்வநாத் ஆனந்துக்கு பிறகு 2-வது தமிழக வீரராக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் குகேஷ். இந்த ஆண்டின் இறுதியில் குகேஷ், சீன வீரரான டிங் லிரினை எதிர்த்து உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ChessBase India (@chessbaseindia)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்