பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் 4 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது.
கோமதி மாரிமுத்து, 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில், அந்த போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தினர் என புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் மேற்கொண்ட போட்டிகளில் விளையாட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அடுத்தகட்ட சோதனையில் அவர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அவர் நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 18, 2019 முதல் மே 19, 2019 வரையிலான சாதனைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த தங்கப்பதக்கமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், இந்த தடையை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்ய உள்ளேன். எனக்கு மாநில அரசு உறுதியாக இருக்கு வேண்டும். நான் எந்த ஒரு ஊக்கமருந்தும் பயன்படுத்தவில்லை. மேலும், நான் அந்த போட்டியின்போது நான் அசைவ உணவு சாப்பிட்டேன். அதில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம்” என கூறினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…