AsianGames2023: 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் இதுவாகும். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டின் அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது.

சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5,000 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் பதக்கம் வென்று அசத்தினார்.  ஸ்டீபிள் சேஸில் நேற்று பாருல் சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், இன்று 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அதாவது, 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் நேற்று இந்தியா 2 பதக்கங்களை வென்றது. அதன்படி, இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதில், பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடத்தில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடத்தில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். எனவே, ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 14 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

7 minutes ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

40 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

44 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

1 hour ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

2 hours ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 hours ago