கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஜெர்மன் வீராங்கனைகள் முழு அளவிலான ஜிம்னாஸ்டிக் உடை அணிந்து,அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, துப்பாக்கி சுடுதல்,குத்துச்சண்டை,வாள் சண்டை,டென்னிஸ்,ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
உடை புரட்சி:
இந்நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஜெர்மன் வீராங்கனைகள் தங்களது ஜிம்னாஸ்டிக் உடையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அதாவது,குறைந்த அளவிலான இடுப்பு வரை அணியும் உடைக்கு பதிலாக, உடலை மறைக்கும் முழு அளவிலான உடை அணிந்து கொண்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
காரணம்:
அமெரிக்காவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய அணி மருத்துவரான லாரி நாசர் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததே காரணம்.
லாரி நாசர்:
அமெரிக்காவின் மெக்ஸிகன் மாகாணம், பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லாரி நாசர் (54). மருத்துவரான அவர் 1986 ஆம் ஆண்டு ஜெர்மன் ஜிம்னாஸ்டிக் தேசிய அணியின் மருத்துவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.இதனையடுத்து,10 ஆண்டு காலத்தில் மூத்த மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
வெளிச்சத்துக்கு வந்த உண்மை:
இதற்கிடையில்,சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை டாக்டர் லாரி நாசர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.இந்த உண்மை கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தன. இதுதொடர்பாக எப்.பி.ஐ போலீஸார் விசாரித்தனர்.
வழக்கு:
மேலும்,இது தொடர்பாக மெக்ஸிகன் மாகாணம் இங்ஹாம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.நீதிபதி ரோஸ்மேரி அகுலினா வழக்கை விசாரித்தார்.
வாக்கு மூலம்:
விசாரணையின்போது நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.குறிப்பாக, 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 156 முன்னாள் வீராங்கனைகள் அவருக்கு எதிராக சாட்சி அளித்தனர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஷான் ஜான்சன் உள்ளிட்ட பலரும் லாரி நாசருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.
தண்டனை:
இந்த வழக்கில் நீதிபதி ரோஸ்மேரி லாரி நாசருக்கு 176 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குழந்தைகள் ஆபாச வீடியோ காரணமாக அவருக்கு ஏற்கெனவே 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.எனவே,அதனையும் சேர்த்து தனது ஆயுள் காலம் முழுவதையும் லாரி நாசர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
எதிர்ப்பு:
இந்த நிலையில்தான்,ஜிம்னாஸ்டிக்ஸில் பெண்களை பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,பிகினி உடைகளுக்கு பதிலாக முழங்கால் வரையிலான இத்தகைய உடையை ஜெர்மன் அணி வீராங்கனைகள் அணிந்ததாக கூறப்பட்டது.
விருப்பம்:
எனினும்,குறைந்த அளவிலான ஆடையோ,அல்லது முழு அளவிலான ஆடையோ தங்களுக்கு எது விருப்பமோ அல்லது வசதியோ அதையே தேர்வு செய்திருப்பதாக ஜெர்மன் வீராங்கனைகள் தெரிவித்தனர்.ஜெர்மன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை,ஆனால் ஒலிம்பிக் போட்டியின் மூலம் ‘உடை புரட்சியை’ ஏற்படுத்தியுள்ளனர்.
அபராதம்:
இதற்கு முன்னதாக ,ஜெர்மன் அணி முதன்முதலில் ஏப்ரல் மாதம் நடந்த ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் இதே போன்ற முழு அளவிலான உடை அணிந்திருந்தது.இதனால்,அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால்,டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர்களது உடை அனைவராலும் விரும்பப்பட்டது. மேலும்,அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…