பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

Default Image

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான 37 வயதான கவுரவ் கில். அவரும் அந்த போட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், கில்லின் கார் சென்ற பொது விபத்தில் சிக்கியது. 145 கீ.மீ. வேகத்தில் சென்ற கார் வளைவில் திருபோது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

Image result for கவுரவ் கில்

இதில் அந்த மோட்டார் சைக்கிலில் பயணித்த அந்த பகுதியை சேர்ந்த நரேந்திரா, அவரின் மனைவி புஷ்பா மற்றும் இவர்களில் மகள் ஜிஜேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிய கவுரவ் கில்லுக்கு விலா பகுதியில் காயம் அடைந்தார். அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பந்தயம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்ன் தலைவர் பிரித்விராஜ் கூறுகையில்; “கார்பந்தயம் காரணமாக இந்த பகுதியை எங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தோம். இந்த சாலை தடை செய்யப்பட்டிருப்பதால், யாரும் வர வேண்டாம் என கடந்த 15 நாட்களாக கூறி வந்தோம். மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திரா, எங்களது பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு பந்தய பாதைக்குள் நுழைந்ததால் விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. கவுரவ் கில் முடிந்த வரை பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகம் காரணமாக ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். கவுரவ் கில், சமீபத்தில் இந்திய அரசிடம் அர்ஜுனா விருதை பெற்றார். மேலும், இந்த விருதைப்பெற்ற முதல் கார் பந்தைய வீரர் இவரே ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்