இங்கிலாந்து அணிக்கு கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக நியமிக்க முடிவு ..!

தற்போது நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பெய்லிஸி இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் போட்டியின் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒவ்வொரு வகையான போட்டிற்கும் தனித்தனி பணியாற்சியாளர்கள் இருந்தால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் என நினைத்து மூன்று வகையான போட்டிற்கும் கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுகிறது.