பறிக்கப்படுகிறதா??சீன நிறுவனத்தின் உரிமம்??

Published by
kavitha

இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பதற்றம் பல உயிர்களை பறித்த நிலையில் இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக்குள் அத்துமீறி, ஆக்கிரமிப்பு நோக்குடன் அடியெடுத்து வைத்த சீனாவிற்கு எதிராக இந்தியாவில் கடும் அனல் தகித்து வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் கோலகலமாகவும், மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கு சீனாவின் செல்வாக்கு மிகுந்த நிறுவனம் விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒப்பந்தம் குறித்து ஐ.பி.எல் ஆட்சி மன்றம் அவரசமாக கூடுகிறது.

ரத்தாகிறதா ஒப்பந்தம்?? விவரமாக எடுத்துரைக்கும் வாரியத்தின் பொருளாளர்:

இந்திய எல்லையில் நடந்த  கடும் சண்டையில் துணிச்சல் மிக்க நம்முடைய வீரர்களின் உயிர்தியாகத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு உள்ளோம். எனவே ஐ.பி.எல். போட்டிக்காக செய்யப்பட்ட பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வது குறித்த ஆலோசிக்க அடுத்த வாரம் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடுகிறது என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் இது குறித்து கூறுகையில், இந்திய வாடிக்கையாளர்களாகிய மக்களிடம் இருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. இதில் ஒரு பங்கை தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஸ்பான்சர்ஷிப்  என்ற வகையில் வழங்குகிறது.

ஆனால் அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு கிரிக்கெட் வாரியம் 42 % சதவீதத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமான ஒன்றே தவிர அது சீனாவுக்கு அல்ல. இந்த பணத்தை நாம் பெறாவிட்டால் அது சீனாவுக்கே சென்றுவிடும்.இருந்தாலும் எதிர்காலங்களில் விளம்பர ஒப்பந்தம் செய்யும் பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

இதே போல் வர்த்தக மற்றும் தொழில் மைய கன்வீனர் பிரிஜேஷ் கோயல் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், சீன நிறுவனங்கள் உடனான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முறித்துக் கொள்ளாவிட்டால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஐ.பி.எல். போட்டி மற்றும் உள்நாட்டில் நடக்கும் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் புறக்கணிப்பார்கள் என்று எச்சரித்து உள்ளார்.

இத்தனை காலங்களாக இல்லாமல் இப்போது இந்திய எல்லைப்பகுதியினை எங்களுடையது என்று உரிமைக் கொண்டாடி உருமிக் கொண்டிருக்கும் சீனாவின் பொருளாதார சந்தை இந்தியா மாறிக்கிடக்கிறது என்றால் அது உண்மை தான்;இந்நிலையில் சீன பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம்’’ என்கிற கோஷம் இந்தியா முழுவதும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு சில சீன நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் குறிப்பாக சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் 2022ம் ஆண்டு வரை நீடிக்க உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடியை விவோ நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

11 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

18 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

41 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

1 hour ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

2 hours ago