பறிக்கப்படுகிறதா??சீன நிறுவனத்தின் உரிமம்??
இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பதற்றம் பல உயிர்களை பறித்த நிலையில் இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக்குள் அத்துமீறி, ஆக்கிரமிப்பு நோக்குடன் அடியெடுத்து வைத்த சீனாவிற்கு எதிராக இந்தியாவில் கடும் அனல் தகித்து வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் கோலகலமாகவும், மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிக்கு சீனாவின் செல்வாக்கு மிகுந்த நிறுவனம் விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒப்பந்தம் குறித்து ஐ.பி.எல் ஆட்சி மன்றம் அவரசமாக கூடுகிறது.
ரத்தாகிறதா ஒப்பந்தம்?? விவரமாக எடுத்துரைக்கும் வாரியத்தின் பொருளாளர்:
இந்திய எல்லையில் நடந்த கடும் சண்டையில் துணிச்சல் மிக்க நம்முடைய வீரர்களின் உயிர்தியாகத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு உள்ளோம். எனவே ஐ.பி.எல். போட்டிக்காக செய்யப்பட்ட பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வது குறித்த ஆலோசிக்க அடுத்த வாரம் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடுகிறது என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் இது குறித்து கூறுகையில், இந்திய வாடிக்கையாளர்களாகிய மக்களிடம் இருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. இதில் ஒரு பங்கை தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஸ்பான்சர்ஷிப் என்ற வகையில் வழங்குகிறது.
ஆனால் அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு கிரிக்கெட் வாரியம் 42 % சதவீதத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமான ஒன்றே தவிர அது சீனாவுக்கு அல்ல. இந்த பணத்தை நாம் பெறாவிட்டால் அது சீனாவுக்கே சென்றுவிடும்.இருந்தாலும் எதிர்காலங்களில் விளம்பர ஒப்பந்தம் செய்யும் பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
இதே போல் வர்த்தக மற்றும் தொழில் மைய கன்வீனர் பிரிஜேஷ் கோயல் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், சீன நிறுவனங்கள் உடனான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முறித்துக் கொள்ளாவிட்டால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஐ.பி.எல். போட்டி மற்றும் உள்நாட்டில் நடக்கும் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் புறக்கணிப்பார்கள் என்று எச்சரித்து உள்ளார்.
இத்தனை காலங்களாக இல்லாமல் இப்போது இந்திய எல்லைப்பகுதியினை எங்களுடையது என்று உரிமைக் கொண்டாடி உருமிக் கொண்டிருக்கும் சீனாவின் பொருளாதார சந்தை இந்தியா மாறிக்கிடக்கிறது என்றால் அது உண்மை தான்;இந்நிலையில் சீன பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம்’’ என்கிற கோஷம் இந்தியா முழுவதும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு சில சீன நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் குறிப்பாக சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் 2022ம் ஆண்டு வரை நீடிக்க உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடியை விவோ நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.