ரிக்கி பாண்டிங் ஸ்பீச் முதல் ஐஎஸ்எல் கால்பந்து வரை! முக்கிய விளையாட்டு செய்திகள்!
சென்னை : இன்றைய நாளின் (16-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், சச்சின் சாதனை பற்றிப் பேசிய ரிக்கி பாண்டிங் முதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரையில் உள்ள சில முக்கிய செய்தி தொகுப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
ரிக்கி பாண்டிங் ஸ்பீச் …!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்த்தில் இருந்து வருகிறார். இது பற்றிப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், ‘சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு’ எனக் கூறியுள்ளார். ஜோ ரூட் இந்த பட்டியலில் 12,027 ரன்கள் அடித்து 7-வது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ்-தென்னாபிரிக்கா தொடர்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது டெஸ்ட் போட்டி என்பது நடைபெற்று வருகிறது. இதில் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 160 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியின் 2-ஆம் நாள் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்கலம் வென்ற அமன் ஷெராவிற்கு ரயில்வேயில் பதவி உயர்வு..!
நடைபெற்று வந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவிற்கு வடக்கு ரயில்வேயில் பதவி உயர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமன் ஷெராவின் கடின உழைப்புக்குப் பாராட்டு தெரிவித்து, அவருக்குப் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.15 கோடிக்கு ஏலம் சென்ற கபடி வீரர் ..!
இந்த ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் நேற்றைய நாள் இரவு தொடங்கப்பட்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணிக்காக நட்சத்திர ரைடர் சச்சின் தன்வர் ரூ.2.15 கோடிக்கு ஏலம் சென்றுள்ளார். இதன் மூலம் ப்ரோ கபடி லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின் தன்வர்.
கால்பந்து வீரரின் தந்தைக்குக் கத்தி குத்து!
ஸ்பெயின் கால்பந்து அணியின் இளம் வீரரான லைமன் யமலின் தந்தை தான் மவுனிர் நஸ்ரவ்ஹி. இவர் வழக்கம் போல அவரது செல்லப்பிராணி நாயை அழைத்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் மவுனிருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதை வாக்கு வாதம் முற்றி நிலையில் கையிலிருந்த கத்தியால் அவரை குத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீது மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள்.
ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை அணியில் விக்னேஷ் ..!
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் வரும் செப்டம்பர்-13 ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணியில் பெங்களூருவைச் சேர்ந்த விக்னேஷ் தட்சனாமூர்த்தி 12-வது வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், 4 ஆண்டுகள் சென்னையின் எஃப்சி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.