அஸ்வினின் பழைய பேட்டி முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரை! சூடான விளையாட்டு செய்திகள்!

Ashwin - Preeti Zinta - Gukesh

சென்னை : இன்றைய நாளின் (17-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், அஸ்வின் பேட்டி முதல் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் உலக செஸ் போட்டி வரையிலான செய்தி தொகுப்பைப் பற்றி பார்க்கலாம்.

ஓய்வை குறித்து பேசிய அஸ்வினின் பழைய பேட்டி வைரல்!

அஸ்வின் ஒரு பழைய பேட்டியில் தனது ஓய்வைக் குறித்து பேசி இருப்பார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “நான் அனில் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரது சாதனையான 619 விக்கெட்டுகளை நான் முறியடிக்க மாட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுகள் எடுத்த  உடனே எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். அது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்” எனவும் கூறி இருந்தார்.  இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட புதிய சிக்கல்!

பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீதி சிந்தா அந்த அணியின் சக உரிமையாளரான மோஹித் பும்ரான் மீது உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இடைக்கால வழிகாட்டுதல்களைக் கோரி ஹரியானா உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் ஆகஸ்ட்-20 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

லம்போர்கினியில் ரோஹித் சர்மா .. வைரலாகும் வீடியோ!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கார்களை விரும்புபவர் என்பது நமக்குத் தெரியும். அவர் தனது ஆடம்பரமான லம்போர்கினியில் தெற்கு மும்பையில் கார் ஒட்டி செல்லும் காட்சியை அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வரலாகப் பரவி வருகிறது.

மகளீர் டி20 உலகக்கோப்பை தொடர்!

சர்வேதச கிரிக்கெட் கவுன்சில், அடுத்ததாக மகளீர் டி20 கோப்பைக்கு தங்களது திட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது. இந்த தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த நிலையில், அடுத்த கட்டமாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்துவது குறித்த ஆலோசனையிலிருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தில் விற்கப்படாமல் போன ப்ரோ கபடி வீரர்!

இந்த ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர ரைடரான ராகுல் சௌத்ரியை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இவரைக் கடந்த ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி லீக்கிலும் எந்த ஆனாலும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் .!

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது இந்த ஆண்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், சீனாவின் க்ராண்ட்மாஸ்டரான டிங் லிரினை எதிர்த்து விளையாடவுள்ளார். இந்த போட்டியானது சிங்கப்பூரில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் நடைபெற உள்ளது. மேலும், 138 வருடங்களுக்குப் பிறகு ஆசியக் கண்டத்திலிருந்து 2 செஸ் வீரர்கள் போட்டியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested