ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி – சேவாக் அறிவிப்பு.!

sehwag

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க சேவாக் ஏற்பாடு.

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு குருகிராமில் உள்ள சேவாக் சர்வதேச பள்ளியில் இலவச கல்வி அளிக்கப்படும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் தனது ட்விட்டரில், இந்த துயரமான நேரத்தில், நான் செய்யக்கூடியது, இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனிப்பதுதான். அத்தகைய குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இலவசக் கல்வியை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுளார்.

முன்னதாக , இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக அதானி குழுமம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா ரயில் விபத்து:

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்