வெற்றியுடன் தொடங்கிய ஃபிரான்ஸ் …! ஆஸ்திரியா அணியை 1-0 என வீழ்த்தி அபாரம் !

AURvFRA , Euro 2024

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியில் ஃபிரான்ஸ் அணி, ஆஸ்திரியா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மெர்குர் ஸ்பீல்-அரினா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயேயும் கடுமையான போட்டியானது நிலவியது.

முதல் 20 நிமிடங்களில் கோல் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தது, ஆனால் துரதிஷ்டவசமாக இரு அணிகளுமே அதை நழுவவிட்டனர். அதன்பின் சரியாக 38-வது நிமிடத்தில் எம்பாபேவின் காலுக்கு சென்ற பந்தை அவர் பெனால்டி பாக்ஸ்ஸை நோக்கி அடிப்பார். அப்போது ஆஸ்திரியா அணியின் வீரரான வோபெர் அதை வெளியில் தட்ட முயற்சி செய்ய தலையை குறுக்கில் விடுவார்.

அப்போது அவரது தலையில் பட்ட அந்த பந்தானது தவறுதலாக கோலுக்கு சென்றுவிடும் . இந்த தவறால் பிரான்ஸ் அணி 0-1 என முன்னிலை வகித்தது. மேலும், அதை தொடர்ந்து விளையாடிய இரு அணிகளும் முதலாம் பாதி வரை 0-1 என நிறைவு செய்தது.  போட்டியின் 2ஆம் பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்பாகவே சென்றது.

தொடர்ந்து போராடிய ஆஸ்திரியா அணி பல கோல்களை அடிக்க முடியாமல் நழுவவிட்டனர். மேலும், பிரான்ஸ் அணியில் கோல் அடிக்க முயற்சி செய்யும் போது எம்பாபியின் மூக்கில் எதிரணி வீரரின் தலை பட்டு, காயம் ஏற்பட்டுவிடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிதளவில் ஒன்றும் ஏற்படவில்லை.

இறுதி வரை போராடிய இரு அணிகளும் மேற்கொண்டு எந்த ஒரு கோலையும் பதிவு செய்ய முடியாமல் திணறினார்கள். இறுதியில் 90 நிமிடங்கள் நிறைவடையும் போது 0-1 என்ற முன்னிலையில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் D பிரிவில் புள்ளிப்பட்டியலிலும், 2ஆம் இடத்தில் பிரான்ஸ் அணி  இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்