நான்காவது முறை சாம்பியன்! ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு.
ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி 2023 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ஊக்கத்தொகையை அறிவித்தது இந்திய ஹாக்கி நிர்வாகம். ஓமானின் சலாலாவில் நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஆசியக் கோப்பையின் பரபரப்பான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை தோற்கடித்து 8 ஆண்டுகளில் 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னதாக, இந்திய அணி 2004, 2008 மற்றும் 2015ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்தாண்டும் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ஊக்கத்தொகையை அறிவித்தது இந்திய ஹாக்கி நிர்வாகம்.
அதன்படி, ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆடவர் ஆசியக் கோப்பை வென்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.2 லட்சமும், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக அறிவித்துள்ளது.