35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு?

Default Image

35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருந்த formula -1 கார் பந்தய போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் புகழ்பெற்ற formula -1 கார் பந்தய போட்டி 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐரோப்பிய formula -1 இடையிடையே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த பந்தயம், 1985 ஆம் ஆண்டு வரை 34 முறை மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த formula -1 கார் பந்தயம் நிறுத்தப்பட்டது.

நெதர்லாந்து நாட்டில் மோட்டார் ரேசிங் கிளப் உட்பட பல்வேறு தரப்பின் முயற்சியின் மூலமாக இந்த ஆண்டு முதல் மீண்டும் போட்டி தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இருந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நிறுத்துவைக்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறங்க இருந்த formula -1 பந்தயத்தை நடத்த எல்லாவிதத்திலும் நாங்கள் ரெடியாக இருந்தோம். ரசிகர்கள் பந்தயத்தை காண்பதற்கான டிக்கெட்டுகள் எல்லாம் ஏற்கனவே விற்றுத்முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், ரசிகர்கள் இல்லாதலானும் போட்டியை நடத்த விருப்பம் இல்லாத காரணத்தினால் பந்தயம் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட போட்டிக்கான அறிவிப்பு மீண்டும் நடைபெறும் என்பதால் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நிலையில் கூடுதலாக ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு கொண்டுவரலாம் எனவும் தெவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்