தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பெல்லியப்பா மரணம் .!
தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா நேற்று சென்னையில் காலமானார்.இவர் தமிழ்நாடு அணிக்காக 1959 முதல் 1974 ஆண்டு வரை விளையாடி உள்ளார்.
பி.கே. பெல்லியப்பா தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். இவர் 4061ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ரன்னாக 141 ரன்கள் அடித்து உள்ளார்.இவர் 93 கேட்ச்கள் , 43 ஸ்டம்பிங் செய்துள்ளார்.