2011 ஆம் நடந்த இந்தியா-இலங்கை இறுதிப்போட்டி “மேட்ச் பிக்சிங்”.. திடீரென சர்ச்சையை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!
2011 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-இலங்கை இடையான உலகக்கோப்பை இறுதிப்போட்டி, “மேட்ச் பிக்சிங்” செய்யப்பட்டது என முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-இலங்கை இடையே 50 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி, இந்தியாவில், மும்பை வான்கடே மைதானத்தி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி, ஜெயவர்தனேவின் அபாரமான சதத்தால் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி, 48 ஆம் ஓவரில் தோனி அடித்த சிக்ஸர் மூலம், இந்தியா அணி வற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக, கம்பிர் 97 ரன்களும், இந்திய அணியின் கேப்டன் தோனி 91 ரன்களும்
எடுத்தனர். மேலும், 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டி, “மேட்ச் பிக்சிங்” செய்யப்பட்டது என முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 2011 உலக கோப்பை இறுதி போட்டி, ஃபிக்ஸிங் செய்யப்பட்டது. நான் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும்போது நடந்த சம்பவம் இது. கிரிக்கெட் வீரர்களை இந்த விவகாரத்தில் உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில குழுக்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த குற்றசாற்று அபாண்டமானது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான ஜெயவர்தனே தெரிவித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், இலங்கையில் தேர்தல் வரப்போகிறது அல்லவா? அதனால்தான் சர்க்கஸை தொடங்கிவிட்டார்கள்.
Is the elections around the corner ????Looks like the circus has started ???? names and evidence? #SLpolitics #ICC https://t.co/bA4FxdqXhu
— Mahela Jayawardena (@MahelaJay) June 18, 2020
அதுமட்டுமின்றி, பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள் பெயர் மற்றும் ஆதாரத்தை வெளியிடுங்கள் எனஜெயவர்தனே தெரிவித்தார். மேலும், ஜெயவர்தனே அந்த போட்டியில் 103 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.