மீண்டும் இலங்கை அணியில் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா!

Sanath Jayasuriya

இலங்கையின் அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்தது.

இதன்பின், விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.

டெஸ்ட் போட்டியில் விளையாட மேக்ஸ்வெல்லுக்கு தகுதி இல்லை… ரிக்கி பாண்டிங்!

இதையடுத்து, இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைக்கப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்து அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர்கள் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் பொறுப்பு ஜெயசுர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது. 1996ம் ஆண்டு சொந்த மண்ணில் இலங்கைக்கு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றெடுப்பதில் ஜெயசூர்யா முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்