டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு.. இதுவே முதல்முறை!
ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு (Tennis Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவித்து வருகிறது.
அதன்படி, பங்களிப்பாளர் பிரிவில் அமிர்தராஜியும், பிளேயர் பிரிவில் லியாண்டர் பயஸ்-யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவின் முதல் உறுப்பினர்கள் ஆவார். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 28 வது நாடு ஆகும்.
இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சீன வீராங்கனையான லீ நா, கடந்த 2019ல் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட முதல் ஆசிய உறுப்பினரானார். தற்போது, இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லியாண்டர் பயஸ் கூறியதாவது, சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவது எனக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று கூறினார்.
இரட்டையர் பிரிவில் 8 பெரிய சாம்பியன்ஷிப்களையும், கலப்பு பிரிவில் 10 சாம்பியன்ஷிப்களையும் வென்றுள்ள லியாண்டர் பயஸ், டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய மூன்று பேரில் ஒருவராக உள்ளார். இதுபோன்று கடந்த 1970கள் மற்றும் 1980களில் ஒரு தொழில்முறை வீரராக இருந்த அமிர்தராஜ், விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு, டென்னிஸ் வர்ணனையாளராக உள்ளார்.
The Ultimate Honor in Tennis ???? ???? ✨
Introducing the Class of 2024: @Leander, @Vijay_Amritraj, and @Ringham7!
3 trailblazers will join an elite group of 264 inductees from 27 nations, with India set to become the 28th nation represented in the ITHF.
???? https://t.co/VzbNA4wDd3 pic.twitter.com/uhhw4sJwBu
— International Tennis Hall of Fame (@TennisHalloFame) December 13, 2023