எதிர்காலத்தை காட்ட நல்ல வாய்ப்பு! இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த வசீம் ஜாஃபர்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற நல்ல பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.
அதைப்போல, இளம் வேக பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒரு வீரர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பிரசித் மற்றும் முகேஷ் இருவருக்கும் தங்களுடைய திறமையை காட்ட இது சரியான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!
இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தென்னாப்பிரிக் காவுக்கு எதிரானடெஸ்டில் ஷமி இல்லாதது நமக்கு பெரிய சோகம், ஆனால் அதே சமயம் பிரசித் & முகேஷ் அவர்கள் இந்திய வேகப்பந்து வீச்சின் எதிர்காலம் என்பதை காட்ட இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த போட்டியில் அவர்கள் நன்றாக விளையாடவேண்டும்.
தங்களுடைய பந்துவீச்சு திறமையை வெளிக்காட்ட தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளுடன் விளையாட வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய விஷயம். பிரசித் & முகேஷ் இவர்கள் இருவரில் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என்ற கேள்வியையும் வசீம் ஜாஃபர் எழுப்பியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.