சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்!

Gautam Gambhir about Sanju Samson

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசி 108 ரன்கள் எடுத்தார். இது தான் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதமும் கூட. நேற்று அசத்தலாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சஞ்சு சாம்சனுக்கு நிறைய திறமை இருக்கிறது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அவர் விளையாடி வருவதை பார்த்தாலே தெரியும். அந்த அளவுக்கு அவர் நல்ல ஒரு கிரிக்கெட் வீரர். அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த அரைசதம் என்னை வெகுவாக கவர்ந்தது.

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் இல்லை.! வேறு யார் தெரியுமா.?

அந்த ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் தேர்வுக்குழுவையும் வியப்பில் ஆழ்த்தி அடுத்ததாக இந்தியா விளையாடும் போட்டியில் அணியில் சேர்க்கவேண்டும் என்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே சஞ்சு சாம்சன் என்றால் அவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை வைத்து தான் பேசுவார்கள். ஆனால், தற்போது சதம் விளாசி சர்வேதச கிரிக்கெட்டிலும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதனை நிரூபித்துள்ளார்” எனவும் கெளதம் கம்பீர் பாராட்டி பேசியுள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் தங்களுடைய 10 விக்கெட்களையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்