கேஎல் ராகுலுக்கு, நடிகையுடன் விரைவில் டும்டும்டும்… தேதி குறிச்சாச்சு.! விவரம் இதோ…
கேஎல் ராகுல், அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி, இருவருக்கும் வரும் ஜனவரி-23 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு முன்னதான ஏற்பாடுகள் மற்றும் விழாக்கள் ஜனவரி-21ஆம் தேதி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் காதலித்துவந்த நிலையில் இந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜோடி தங்கள் திருமணத்தைப் பற்றி அதிகாரபூர்வமாக இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஜனவரி 23 அன்று திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 23 ஆம் தேதி அதியாவும், கேஎல் ராகுலும் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நபர்களுடன் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர், இந்த திருமண விழாவில் சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப், அக்ஷய் குமார், தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்ட சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.