சென்னை : பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ் சர்வதேச கால் பந்திலிருந்து தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
கால்பந்தில் ஜெர்மனி அணிக்காக விளையாடி வருபவர் தான் டோனி குரூஸ், இவர் ஜெர்மனி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆவார். மேலும், ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியின் நட்சத்திர மிட்-பில்டர் ஆவார். மேலும் இவர் 14 ஆண்டுகளாக ஜேர்மனி கால்பந்து அணியில் ஒரு முக்கிய புள்ளியாக விளையாடி வந்தவர் ஆவார். அதே போல கடந்த 2014 ம் ஆண்டு இவர் ரியல் மாட்ரிட் அணியில் இடம்பெற்று தற்போது வரை 10 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
அத்துடன் ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். அதே போல ரியல் மாட்ரிட் அணிக்காக இவர் 305 போட்டிகள் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார், அதனை தொடர்ந்து பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 13 கோல்களும், பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளில் விளையாடி 10 கோல்களும் அடித்து அசத்தியுள்ளார்.
இவரது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி யூஇஎப்ஏ (UEFA) சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளது. இந்த நிலையில் டோனி க்ரூஸ் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ரியல் மாட்ரிட் அணிக்காக நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாளாக தான் நான் பார்க்கிறேன். கால்பந்து தான் என்னை ஒரு மனிதராகவும், வீரராகவும் மாற்றியது.
என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் குறிப்பாக இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும். அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், எனது முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் இந்த தருணத்தில் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் ஓய்வால் அவரது ரசிகர்களும், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களும் சற்று கவலையில் இருந்து வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…