எதிரணி வீரரின் முகத்தில் துப்பிய மார்கஸ் துராம்.! போட்டிகளில் விளையாட தடை.!

Default Image

போண்டஸ்லிகா கால் பந்து தொடரில் (bundesliga Football league)  ஹோபன்ஹெய்ம் கிளப் அணியின் (Hoffenheim Football club) வீரர்  முகத்தில் துப்பியதற்காக போர்ஸியா மோன்செங்கலாட்பாக் (Borussia Mönchengladbach club ) கிளப் அணியின் வீரர் மார்கஸ் துராம் 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த  சனிக்கிழமை இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டியில் ஹோபன்ஹெய்ம் கிளப் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் இந்த போட்டியின் நடுவே ஸ்டீபன் போஸ் மற்றும் மார்கஸ் துராம் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவத்தின் போது ஹோபன்ஹெய்ம் கிளப் அணியின் வீரரான ஸ்டீபன் போஷின் முகத்தில் துப்பியுள்ளார் போர்ஸியா மோன்செங்கலாட்பாக் கிளப் அணியின் வீரர் மார்கஸ் துராம். இதன் காரணமாக போட்டியின்  நடுவர் ஃபிராங்க் வில்லன்போர்க் துராமை போட்டியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

மேலும் மார்கஸ் துராமுக்கு 40,000 யூரோக்கள் ($ 50,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே போர்ஸியா  மோன்செங்கலாட்பாக் இயக்குனர் மேக்ஸ் எபெர்ல் கூறுகையில்,மார்கஸ் வேண்டுமென்றே ஸ்டீபன் போஷில் துப்பவில்லை.ஸ்டீபன் போஷுடனான ஒரு வாக்குவாதத்தின் போது அவர் பல முறை பிரெஞ்சு மொழியில் திட்டியதாகவும், அவர் தன்னிச்சையாக வார்த்தைகள் மற்றும் மிகுந்த உற்சாகத்தின் போது துப்பினார் என்றும் அவர் என்னிடம் கூறியதாக எபெர்ல் தெரிவித்துள்ளார்.ஆனால் மார்கஸ் துராம் போட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.மேலும் அவரது பதிவில், இன்று என் கதாபாத்திரத்தில் இல்லாத ஒன்று நடந்துள்ளது.இனி ஒருபோதும் இதுபோன்று நடைபெறாது. நான் தவறான வழியில் பதிலளித்துள்ளேன். ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது, வேண்டுமென்றே அல்ல என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Marcus Thuram (@thuram_17)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்