கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி..! அமெரிக்க கிளப் இன்டர் மியாமியில் சேர வாய்ப்பு..!

MessijoinsInterMiami

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பிரெஞ்சு சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அவர் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஸ்பானிஷ் கால்பந்து பத்திரிகையாளர் கில்லம் பலாக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மெஸ்ஸி இண்டர் மியாமியில் இணைய முடிவு செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். மெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) கோப்பையை வென்றார்.

பின், ஆகஸ்ட் 2021-இல் பார்சிலோனா கால்பந்து கிளப்லிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில் சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிரெஞ்சு அணிக்காக 71 முறை விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார். மேலும், 2022ம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அணியின் மூன்றாவது உலகக் கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்