புதிய சாதனையை படைத்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ !!

Christiano Ronaldo

ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் ஒன்றான சவுதி புரோ லீக் தொடரில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த புரோ லீக் கால்பந்து தொடரின் 48-வது சீசன் நடைபெற்று நேற்று முடிவடைந்துள்ளது. இந்த புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள், தலா 2 முறை மோதிக்கொள்ளவர்கள். இந்த தொடரில் நேற்று ரியாத்தில் நடைபெற்ற 39-வது சுற்றின் கடைசி லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த கடைசி லீக் போட்டியில் ரொனால்டோவின் அல்-நாசர் அணி, அல்-இத்திஹாடு அணியை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 4-2 என்ற கணக்கில் அல்-நாசர் அணி வெற்றி பெற்றது. இதில் 2 கோல்களை ரொனால்டோ அடித்து அசத்தினார். இதன் மூலம் சவுதி புரோ லீக் தொடரில் 35 கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ உள்ளார். இதற்கு முன்னர் 2018-19 நடைபெற்ற தொடரில் அல்-இத்திஹாடு அணி வீரரான அப்தர்ரஜாக் ஹம்தல்லா 34 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது முறியடித்துள்ளார். இது தவிர்த்து ரொனால்டோவின் அணியான அல்-நாசர் அணி முதன் முறையாக இந்த சவுதி புரோ லீக் தொடரில் 100 கோல்கள் அடித்துள்ளது. மேலும், அல் ஹிலால் அணி 96 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதே நேரத்தில் அல் நாசர் அணி 82 புள்ளியுடன் 2-வது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்