கால்பந்து :மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது..! நாளை இந்தியா- வங்கதேசம் மோதல்..!

காத்மண்டுவில் தற்போது பதினெட்டு வயதினருக்கான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆறு அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் ” பி” பிரிவில் இந்திய அணி , வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
Into the #SAFFU18 final! ????????
???? Watch the goals from India ???????? U-18’s 4⃣-0⃣ semifinal victory against the Maldives ????????#IndianFootball ⚽️ #BackTheBlue ???? pic.twitter.com/45tUwYgTuO
— Indian Football Team (@IndianFootball) September 28, 2019
இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் மாலத்தீவு அணியுடன் , இந்திய அணி மோதியது.போட்டியின் முதல் பாதியில் முகமது ரபி மற்றும் நரேந்தர் கெலாட் இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர்.
பின்னர் இரண்டாவது பாதியில் மன்வீர் சிங் மற்றும் நின்தோயின்கங்பா இருவரும் தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 4-0 என்ற கணக்கில் மாலத்தீவை அணியை வீழ்த்தியது. நாளை இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை சந்திக்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025