(Photo by Stringer/Anadolu Agency via Getty Images)
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிப்பு.
கடந்த 2018ம் ஆண்டு சவுதி கிளப்பில் இணைந்த நைஜீரிய வீரர் அகமது மூசாவுக்கான கூடுதல் தொகையாக லெய்செஸ்டர் சிட்டிக்கு 390,000 பவுண்டுகள் செலுத்தத் தவறியதற்காக, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிளப் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யவோ அல்லது பதிவு செய்யவோ ஃபிஃபாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது மூன்று தொடர்ச்சியான பரிமாற்ற சாளரங்களுக்கு நீடிக்கும் என்றும் Al Nassr-இன் உரிமையாளர்கள் தடையை நீக்குவதற்கு லீசெஸ்டருக்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் ஃபிஃபாவின் வலியுறுத்தியுள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி, கடந்த 2018-ஆம் ஆண்டில் Leicester City அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை லெய்செஸ்டர் சிட்டிக்கு செலுத்த ரொனால்டோவின் அல் நஸர் அணி தவறிவிட்டது. இதையடுத்து, FIFA 2021ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது. இந்த நிலையில், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை நீக்கும் வகையில் அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…