ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை!

Cristiano Ronaldo Al Nassr

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிப்பு.

கடந்த 2018ம் ஆண்டு சவுதி கிளப்பில் இணைந்த நைஜீரிய வீரர் அகமது மூசாவுக்கான கூடுதல் தொகையாக லெய்செஸ்டர் சிட்டிக்கு 390,000 பவுண்டுகள் செலுத்தத் தவறியதற்காக, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிளப் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யவோ அல்லது பதிவு செய்யவோ ஃபிஃபாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது மூன்று தொடர்ச்சியான பரிமாற்ற சாளரங்களுக்கு நீடிக்கும் என்றும் Al Nassr-இன் உரிமையாளர்கள் தடையை நீக்குவதற்கு லீசெஸ்டருக்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் ஃபிஃபாவின் வலியுறுத்தியுள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி, கடந்த 2018-ஆம் ஆண்டில் Leicester City அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை லெய்செஸ்டர் சிட்டிக்கு செலுத்த ரொனால்டோவின் அல் நஸர் அணி தவறிவிட்டது. இதையடுத்து,  FIFA 2021ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது. இந்த நிலையில், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை நீக்கும் வகையில் அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்