‘தி கோட்’ என மறுபடியும் நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து உலகில் வரலாற்று சாதனை!
கால்பந்து உலகில் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை : கால்பந்து உலகின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தில் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது, அடுத்ததாக நேற்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
கால்பந்தில், 900 கோல்களை அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரொனால்டோ. இவர் கால்பந்தைத் தாண்டி பல சமூகத் தளத்திலும் சாதனையைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் தொடங்கிய தொடங்கிய யூட்யூப் சேனலும் மிக விரைவில் அதிக சப்ஸ்க்ரைபரை பெற்று சாதனை படைத்தது. மேலும், இன்ஸ்டகிராம், எக்ஸ் இரண்டிலும் இவர் தான் அதிக பாலோவர்களை கொண்ட செலிபிரிட்டியாக உள்ளார்.
சிறிய நாடான போர்ச்சுகளில் பிறந்து இன்றைக்கு தலை சிறந்த கால்பந்து வீரர் என்ற பெருமையைப் படைத்திருக்கிறார், சமீபத்தில் நடந்த சவூதி கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக 1 கோல் அடித்தார் இதன் மூலம் 899 கோல்களை அவர் நிறைவு செய்தார்.
இந்த நிலையில் தான் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதில் ஒரு கோல் அவரை அடித்ததால் கால்பந்து வரலாற்றில் “900 கோல்களை” அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், நேற்று போட்டி முடிந்த பிறகு இந்த சாதனையைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார்.
அவர் கூறியதாவது, “இது நான் நீண்ட காலமாக அடைய விரும்பிய ஒரு மைல்கல் சாதனை தான். நான் இந்த 900 கோல்களை அடைவேன் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், நான் தொடர்ந்து விளையாடும் போது அது இயல்பாக நடக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த சாதனையை நிகழ்த்தியதால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன்”, என்று பேசி இருக்கிறார்.