ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று குரூப்-B வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் அஹ்மது பின் அலி ஸ்டேடியத்தில் மோதின. 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் வெய்ன் ஹெனஸி கத்தார் உலகக்கோப்பை 2022 இன் முதல் சிவப்பு அட்டையை வாங்கினார். […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் ஒரு […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை இல் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இன்று இரவு 9:30 மணிக்கு மோதுகின்றன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் ஸ்டேடியம்-974 இல் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து விலகிய இருநாட்களுக்கு பிறகு ரொனால்டோ தனது போர்ச்சுகல் அணியுடன், இந்த உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் கானா அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது. 37 […]
ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகரின் போனை கீழே தள்ளிவிட்டதற்காக, கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50,000 யூரோ(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒழுங்கற்ற முறையில் ஈடுபட்டதாகக்கூறி மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் முடித்துள்ளது. […]
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் நேற்று கோஸ்டாரிகாவிற்கு எதிராக ஸ்பெயின் 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தனது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-E வில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் அல் துமாமா ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலாவது பாதியில் ஸ்பெயினின் டானி ஓல்மோ, மார்கோ அசென்சியோ மற்றும் ஃபெரான் டோரஸ் ஆகியோர் 3 கோல்களை அடித்தனர். இதனால் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா வெற்றியைக் கொண்டாடும் சவுதி அரேபியா இன்று தேசிய விடுமுறையாக அறிவித்த்துள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் […]
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிலிருந்து தன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விலகியுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரொனால்டோ விலகியுள்ளார். ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் குறித்து ஒரு நேர்காணலில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தற்போது பரஸ்பர உடன்பாடு மூலம் வெளியேறினார். இது குறித்து ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற உள்ளார். ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் […]
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022, அர்ஜென்டினா-சவுதி அரேபியா போட்டியில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 இல் இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும் சவுதி அரேபியா அணியும் விளையாடின. இந்த போட்டியில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது. அதன் பின் இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை, ஆனால் […]
கத்தாரில் நேற்று தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில், 92 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடரை நடத்தும் கத்தார் அணி தோல்வி. உலகெங்கும் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இதில் தொடக்க நாளான நேற்று முதல் போட்டியில் குரூப் A விலிருந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியான கத்தார் மற்றும் ஈக்குவடார் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈக்குவடார் அணி, கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் […]
2022 ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை என ஃபிஃபா அறிவித்துள்ளது. கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்தொடரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், நாளை கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், முதன்முறையாக அரபு நாடுகளில், கத்தாரில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்காக 32 அணிகள் பங்குபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகையை ஃபிஃபா […]
கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக […]
கத்தாரில் நவ-20இல் தொடங்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு மெஸ்ஸி கால்பந்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படுபவர் அர்ஜென்டினா நாட்டைச்சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் கத்தார் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, கால்பந்து ஆட்டம் மாறிவிட்டது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி மற்ற கால்பந்து வீரர்களைப் போல் அல்ல, உடல் ரீதியாக அவர் சரியாக ஈர்க்கக்கூடிய மாதிரி இல்லை, சக […]
2022 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, கத்தாரில் நவ-20 இல் தொடங்கி டிச-18 வரை நடக்கிறது. உலகெங்கும் பெரும் ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டின், 22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நவ-20 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், அரபு நாடுகளில் முதன்முறையாக நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் பெறும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடர், இதற்கு […]
முதன்முறையாக,FIFA உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டியை மூன்று வெவ்வேறு நாடுகள் நடத்துகின்றன.அதன்படி,2026 உலகக் கோப்பைக்கான போட்டிகள் 11 அமெரிக்க நகரங்களிலும், மெக்ஸிகோவில் உள்ள மூன்று ஹோஸ்ட் தளங்களிலும்,கனடாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறும் என்றும்,இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன எனவும் சர்வதேச கால்பந்து குழு (FIFA) அறிவித்துள்ளது. அதன்படி,அட்லாண்டா,பாஸ்டன்,மெக்ஸிகோ சிட்டி, மியாமி, டல்லாஸ்,குவாடலஜாரா,ஹூஸ்டன்,சான் பிரான்சிஸ்கோ,கன்சாஸ் சிட்டி,லாஸ் ஏஞ்சல்ஸ்,மான்டேரி,நியூயார்க்/நியூ ஜெர்சி,பிலடெல்பியா, சியாட்டில்,டொராண்டோ மற்றும் வான்கூவர் என மொத்தம் 16 ஹோஸ்ட் நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. Your #FIFAWorldCup 2026 Host […]
தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து இறுதிப் போட்டியானது அர்ஜென்டினா-இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதன்படி,ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் லாடரோவும் மற்றும் 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும்,94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலாவும் கோல் அடித்து அசத்தினர்.இதனால,இப்போட்டியில்,அர்ஜென்டினா அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன்ஸ் […]
மிகவும் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா,1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு முறை கோல் அடித்தபோது அணிந்திருந்த ஜெர்சி,நேற்று 9.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.இது விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான ஏலத்தில் இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும் என்று ஏல நிறுவனமான சோதேபிஸ் தெரிவித்துள்ளது.ஏனெனில்,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மரடோனா அடித்த கோல் கால்பந்து வரலாற்றில் இன்று வரை மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும்,இது தொடர்பாக,தெரு உடைகள் மற்றும் நவீன சேகரிப்புகளின் […]
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் தான் 18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதிகுமாரி. இவர் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏப்ரல் 4-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்காக பல வயது பிரிவில் விளையாடி அசத்திய இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நிலையில் இது தொடர்பாக ஜோதியின் பெற்றோர் கூறுகையில் ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் நிச்சயம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 8 பிரிவுகள்: இந்த நிலையில்,உலகக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்றில் எந்த அணிகள்-யாருடன் மோதுவது என்பது குறித்து குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து […]
ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு […]