ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப், சால்ட் பே வை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. கொண்டாட்டத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு மத்தியில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பையுள்ளது. பிரபல உணவகத்தை நடத்தி வரும் சால்ட் பே, அர்ஜென்டினா […]
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். […]
கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.
FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிப்பு. 2022-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது. கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் த்ரிலான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இந்த வெற்றியை […]
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கூகுள்தேடல் பதிவு என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கத்தாரில் நேற்று நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து நேற்று ஒருநாளில் கூகுளில் 25 வருடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, கூகுள்தேடல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக […]
அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் இன்று 1000பேருக்கு இலவச பிரியாணி அறிவித்த ஹோட்டல். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில், பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை முன்னிட்டு உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் ரசிகர்கள் அர்ஜென்டினா வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவின் திரிசூரில் உள்ள ராக்லாண்ட் ஹோட்டல் இன்று (திங்கள் கிழமை) 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்குவதாக அறிவித்துளளது.
ஃபிஃபா உலககோப்பையின் பிரான்ஸ் தோல்வியை அடுத்து, அந்நாட்டின் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை 2022இன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் 4-2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து […]
ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார். கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் […]
தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது […]
பிரேசிலின் நெய்மர் இந்தியாவிலுள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து பிரேசில் வெளியேறிய பிறகு, அந்த அணியின் நெய்மர் உலகெங்கும் உள்ள பிரேசில் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் கேரளாவில், உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தமுறை கேரள ரசிகர்கள், செய்த செயல் உலககால்பந்து ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டது. நட்சத்திர […]
கடலுக்கடியில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து லட்சத்தீவைச்சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார். கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, லட்சத்தீவை சேர்ந்த முகமது ஸ்வாதிக் என்ற ரசிகர் கடலுக்கடியில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்துள்ளார். அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொள்ளும் முன்னரே முகமது ஸ்வாதிக், தனது சமூக வலைதளத்தில் அர்ஜென்டினா அணி […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு […]
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு. உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]
ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் […]