ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் தங்கள் கிளப் அணியில் இணையுமாறு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது […]
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல். கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் […]
எம் எஸ் தோனியின் மகளான ஜிவா தோனிக்கு, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார். பரபரப்பாக நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணியை ஆதரித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அர்ஜென்டினாவும் உலகக்கோப்பையை வென்றது, மெஸ்ஸியும் கோல்டன் பால் விருது வென்றார். உலகக்கோப்பை முடிந்துள்ளதால் தற்போது மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்நிலையில் […]
கத்தாரில் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி வீரர்கள் கத்தாரில் தங்கிய அறையைப் பகிர்ந்து கொண்ட கத்தார் பல்கலைக்கழகம் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியமாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளது. லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 கோல் அடித்து 2-வது […]
சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், ரொனால்டோ அணியில் இணைவதற்கு முன் அவருக்கான மெடிக்கல் டெஸ்ட்டை அட்டவணையிட்டுள்ளதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் அல்-நசர் கிளப், போர்ச்சுகல் அணியின் ரொனால்டோவை தங்கள் கிளப்பில் இணையுமாறு கேட்டுள்ளதாகவும் அதற்கு ரொனால்டோ, மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டார். இந்த நிலையில் அல்-நசர் கிளப், ரொனால்டோவிற்கான மருத்துவ பரிசோதனையை அட்டவணையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை வருட […]
உலகக்கோப்பை வெற்றியின்போது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அரபு கருப்பு அங்கியை வாங்க விருப்பம் தெரிவித்த ஓமன் எம்.பி. கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற அர்ஜென்டினா மற்றும் வீரர்களுக்கு உலகக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸிக்கு, அரபு நாட்டில் அணியப்படும் பிஷ்ட் எனும் கருப்பு நிற அங்கியை கத்தார் மன்னர் வழங்கினார், மேலும் மெஸ்ஸி இந்த அங்கியை(பிஷ்ட்டை) அணிந்துகொண்டு கோப்பையை வாங்கினார். பிஷ்ட் என்பது அரபு நாடுகளில் பிரபலமான ஒரு பாரம்பரிய […]
எம்பாப்பேவை கேலி செய்ய எமிலியானோவை, மெஸ்ஸி ஏன் அனுமதிக்கிறார் என்று மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. கோப்பையை வென்ற கையோடு திரும்பிய அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பேவின் முகத்துடன் கூடிய குழந்தை பொம்மையை […]
ஃபிஃபா அமைப்பானது “The GOAT” விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, 36 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் வாங்கும் வாய்ப்பை 1 கோலில் தவற விட்டார். இருந்தும் மெஸ்ஸி கோல்டன் பால் விருது வென்றார். கால்பந்து உலகில் GOAT(Greatest Of All Time) எனப்படும் சிறந்த வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸிக்கும், […]
அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. உலக கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டனர்.ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றனர். […]
பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் […]