“12 வீடியோ ..9 ஷார்ட்ஸ்”! யூட்யூப் சேனல் மூலம் ரொனால்டோ சம்பாதித்தது இவ்ளோவா?

Ronaldo Youtube Salary

சென்னை : கால்பந்து ஜமாபவனான ரொனால்டோ தனது யூட்யூப் சேனல் மூலம் தற்போது வரை சில நூறு மில்லியனுக்கும் அதிகமாக சம்மதித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து விளையாட்டில் மட்டுமல்லாது சமூகவலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் தான் ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ’. இவர் 2 நாட்களுக்கு முன்பு புதிதாக “UR Ronaldo” என்ற ஒரு யூட்யூப் சேனலை தொடங்கினார். அவர் தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்தனர். யூட்யூப்பில் அதிவேக  சப்ஸ்க்ரைபர்ஸை விரைவாகத் தொட்டவர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

இவர் இந்த சேனலில் இதுவரை 12 முழு நீல வீடியோக்களும், 7 ஷார்ட்ஸ் வீடியோக்களும் பதிவிட்டுள்ளார். அதில் சில வீடியோக்களில் அவர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்வது போல வீடியோவாக அமைந்துள்ளது, ஆனால், பெரும்பாலான வீடியோக்கள் அனைத்தும் கால்பந்தை பற்றியே அமைந்துள்ளது. இதனால், அவர் இந்த சேனலில் கால்பந்தை பற்றித் தான் அதிகம் வீடியோ பதிவிட வாய்ப்பிருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இவரது யூட்யூப் சேனல் மூலம் இவர் தற்போது வரை சில நூறு மில்லியனுக்கும் அதிகமாகச் சம்மதித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவரது சேனல் அதிகம் கால்பந்தைப் பற்றி கற்றுக் கொடுக்கும் ஒரு  எஜூகேஷனல் (Eductional) சேனலாக அமைந்துள்ளது. ஒரு எஜூகேஷனல் சேனலுக்கு யூட்யூப் மூலம் RPM-மாக 1,000 பார்வைகளுக்கு 6 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கப்படும்.  அப்படிப் பார்க்கையில் ஒரு மில்லியன் பார்வைகளுக்கு 1,200 முதல் 6,000 வரை அமெரிக்க டாலர் வரை வழங்கப்படும்.

அதன்படி ரொனால்டோ பதிவிட்ட 12 வீடியோக்கள் மட்டும் இதுவரை 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நாம் 125 மில்லியன் என்றே எடுத்ததுக் கொண்டாலும், RPMக்கு 3,500 டாலர் என்று எடுத்துக்கொண்டாலும், அவரது வீடியோ மட்டுமே இது வரை 4,37,500 டாலர்களைக் கடந்திருக்கும்.

அதாவது இந்திய மதிப்பில் கூறப்போனால் மூன்று கோடியே 63 லட்சத்து12 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். (ரூ.3,63,12,500) இது வெறும் வீடியோக்கள் மூலம் மட்டுமே இதுவரை சம்பாதித்த தொகையாகக் கூறப்படுகிறது. மேலும், ஷாட்ஸ் விடீயோக்களையும் சேர்த்து பார்த்தால் 100 மில்லியனுக்கும் அதிகமாக அவர் சம்பாதித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்